முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம்

5

க.எண்: 2026100283
நாள்: 10.11.2026

அறிவிப்பு:
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த
நம் மாவீரர் தெய்வங்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்கவுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: கார்த்திகை 11 | 27-11-2026 மாலை 04 மணியளவில்
அகஸ்தியர்பட்டி
இடம்:
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் இருந்து கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நிகழ்வுக்கு நிதிப் பங்களிக்க: donate.naamtamilar.org

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version