முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஆகச்சிறந்த களப்பணியாளன் அன்புத்தம்பி…

0

திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஆகச்சிறந்த களப்பணியாளன் அன்புத்தம்பி அவின்குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். இளம் வயதிலேயே இன்னுயிரை இழந்த தம்பியின் இறப்புச்செய்தி என்னைப் பெரிதும் வேதனையடைய செய்துள்ளது.

பேரிழப்பில் சிக்குண்டு தவிக்கும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்.

Exit mobile version