உலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்!
அன்பும் – நற்பண்பும் ஓங்கி,
அறமும் – மறமும் சிறந்து,
வளமும் – நலமும் பெருகி,
ஊர்தோறும் திருவிழாக்கள்,
உவகை தரும் பெருவிழாக்கள்
என நாள்தோறும் களிப்பூட்டும்
சித்திரை மாதத்தின் முதல் நாளினை
இன்பமுடன் கொண்டாடி மகிழும்
உலகத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!




