அரசியல் விமர்சகர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் அம்மா கமலா ஆச்சிமுத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். உயிருக்கினிய தாயை இழந்து வாடும் தம்பி சங்கருக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கமலா ஆச்சிமுத்து அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.




