க.எண்: 2026020095
நாள்: 28.02.2026
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் – 2026இல் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட
28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனைவரையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற மாசி 23 (07-03-2026) அன்று மாலை 04 மணியளவில் பாண்டிச்சேரி, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் திடலில் (முருகா திரையரங்கம் அருகில்) நடைபெறவிருக்கிறது.
பாண்டிச்சேரி மாநில
வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: மாசி 23 | 07-03-2026 மாலை 04 மணியளவில் இடம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் திடல் (முருகா திரையரங்கம் அருகில்) பாண்டிச்சேரி
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், பாண்டிச்சேரி மாநிலத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களும், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



