திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி வை.சிவா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
‘நாம் தமிழர்’ எனும் இனமானப் பெரும்படையில் தன்னை
இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றிய அன்புத்தம்பியின் இழப்பு பெருந்துயரத்தைத் தருகிறது. கட்சியின் வேர்களாகத் திகழும் களப்போராளிகளின் இழப்பென்பது ஈடு இணையற்றது. மறைந்தாலும் தம்பியின் கனவுகளும், இலட்சியங்களும் நம்மோடுதான் இருக்கும். அதனை ஈடேற்ற உறுதியேற்போம்.
தம்பி சிவா அவர்களுக்கு என்னுடைய
கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.




