முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்! சிம்மக்குரலால்…

0

தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்!

சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்!

வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி!

வாழ்வின் துன்பங்களை மறக்கடித்து, மக்களின் மனங்களை மகிழ்விக்கும் நடிப்புக்கலையின் பிதாமகன்,

உடலசைவில் நவரசங்களையும் வெளிப்படுத்தும் வல்லமை பெற்ற தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்,

நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நம்முடைய ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! அந்த மகத்தான மேதைக்குப் பெருமையோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version