நாம் தமிழர் கட்சி – வடலூர் நகரம், சுற்றுச்சூழல் பாசறையின் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜெயராமன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் சுற்றுச் சூழல் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி ஜெயராமன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி ஜெயராமன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி ஜெயராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




