உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று,
கொடைக் கைகளை விரித்து நீட்டி,
அருள்நெறி பொழிந்த பெருமகன்..!
‘உன்னைப்போல் உன் அயலானையும் நேசி’ என்று கற்பித்து, உலக நன்மைக்காக எல்லையற்ற கருணையும், ஈடில்லா
பேரன்பும் கொண்டு தம்மையே
ஈகம் செய்த இறைமகன்..!
மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன்.
அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே
என் விருப்பம் என்று மக்களின் மனங்களில் புரட்சி செய்த மகான்..!
‘உன் இனத்தான் ஒருவனையே
உன் அரசனாக்குவாய்; உன் இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே’ என்று மானுட குலத்திற்கே இறையாண்மை கற்பித்த இறைமகன் ஏசுபிரான் அருளிய
மணிமொழி பற்றி, நானிலம் எங்கும் நன்மை தரும் அரசும், சமூகமும் மலர்ந்திடவும்,
அன்பும், அமைதியும் நிலைத்திடவும்,
இறைமக்கள் எல்லோரும் இந்நன்னாளில் ஒருமித்து வழிபட விழைகிறேன்.
பெருமகனார் ஏசு பிரான்
பிறந்திட்ட இப்புனித நாளில்
உலகெங்கும் வாழும்
கிறித்துவப் பெருமக்கள்
அனைவருக்கும் என்னுடைய
நெஞ்சம் நிறைந்த
நல்வாழ்த்துகள்!




