தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்

4

க.எண்: 2025121013

நாள்: 11.12.2025

அறிவிப்பு:

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்
வீரப்புகழ் போற்றுவோம்!மாபெரும் பொதுக்கூட்டம்

தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: மார்கழி 09 | 24-12-2025 மாலை 04 மணியளவில்

இடம்: கருங்குளம் (திருச்செந்தூர் சாலை)
திருவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம்

 

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி,
நாம் தமிழர் கட்சி சார்பாக,
வருகின்ற மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) மாலை 04 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் கருங்குளம் திருச்செந்தூர் சாலையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி