முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தொடக்கம் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்

4

க.எண்: 2026100276
நாள்: 22.10.2026

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, வருகின்ற ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமையன்று தொடங்கப்படவிருக்கும் தூர்வாரும் பணிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காலை 11:30 மணியளவில் நேரில் பார்வையிடவிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக
மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: ஐப்பசி 10 | 27-10-2026 காலை 11:30 மணியளவில்
இடம்: மணிமுத்தாறு (தொண்டி)
இராமநாதபுரம் மாவட்டம்
இப்பெரும்பணியில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version