முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் ஜமீன்தார் மறைந்த போற்றுதற்குரிய…

0

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் ஜமீன்தார் மறைந்த போற்றுதற்குரிய ஐயா திருஞானசம்பந்தர் பந்தாரியார் அவர்களின் இளைய மகன் பெருமதிப்பிற்குரிய ஐயா
மகேந்திர பந்தாரியார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

ஏழை எளிய மக்களுக்கு பேருதவிகள் பல செய்து மக்கள் தொண்டாற்றிவந்த
ஐயா மகேந்திர பந்தாரியார் அவர்களின் மறைவு, அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் ஏற்பட்டுள்ள ஈடுசெய்யவியலாத இழப்பாகும்.

ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், வேட்டவலம் பகுதிவாழ் மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

பெருமதிப்பிற்குரிய ஐயா மகேந்திர பந்தாரியார் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version