முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர்…

0

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி பா. விஜயகுமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு களப்பணியாற்றிவந்த பா.விஜயகுமார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

அன்புத்தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

தம்பி விஜயகுமார் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version