மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர், பள்ளி ஆசிரியர், தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, என் பேரன்பிற்குரிய தம்பி கவிஞர் சினேகன் அவர்களின் அன்புத்தந்தை சிவசங்கு அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனையுற்றேன்.
அன்பு அப்பாவை இழந்துவாடும் தம்பி சிநேகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
பெருமதிப்பிற்குரிய அப்பா சிவசங்கு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
@KavingarSnekan




