தேமுதிக பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அன்புத்தாயார் அம்சவேணி அம்மையார் அவர்கள் இன்று 07-10-2025 மறைவெய்திய செய்தியறிந்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினேன்.
அன்னையை இழந்து பெருந்துயருற்றுள்ள அண்ணி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் அன்புச்சகோதரர் சுதீஷ், தம்பிகள் விஜயபிரபாகரன், சண்முகப்பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டேன்.
அம்மா அம்சவேணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
@PremallathaDmdk







