நேற்று 27-09-2025 கரூரில் தவெக தலைவர் தம்பி விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தியறிந்து, இரவோடு இரவாக கரூர் நோக்கி விரைந்து, இன்று 28-09-2025 கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பில் துயருற்றுள்ள அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.







