முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

21.02.2026 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பேரெழுச்சியாக எமது இனச்சொந்தங்கள் கூடியிருந்தீர்கள். இது ‘நம் இனத்தின் திருவிழா, எல்லோரும் கூடுவோம், தமிழ்ப்பேரினப் பெருவிழா வென்று வாகை சூடுவோம், குடும்பம் குடும்பமாய் கூடுவோம், கொடிய அரசியலை மூடுவோம்’ என்று உங்கள் பிள்ளைகள் அழைத்த அந்த அன்பு அழைப்பை ஏற்று உலகெங்கும் இருக்கின்ற பல்வேறு நாடுகளிலிருந்து எனது அன்புச்சொந்தங்கள் அந்த மாநாட்டிற்கு வந்து பங்கேற்றீர்கள்.

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலிருந்தும் பேரெழுச்சியாக எமது இனச் சொந்தங்கள், இந்த எளிய பிள்ளைகளின் கொள்கையை, அவர்கள் முன்வைக்கிற அரசியலைப் புரிந்துகொண்டு பேரெழுச்சியாகக் கூடியிருந்தீர்கள். இது தமிழரின வரலாற்றில் பெரும் மாறுதல்; ஒரு மாபெரும் புரட்சி! அதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும்; அங்கே நீங்கள் குடும்பம் குடும்பமாக வந்ததைப் பார்த்து, நான் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கும் பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அந்த மாநாடு தந்தது.

பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்.

நம்முடைய பணி தொடரட்டும். இது ஒரு தொடக்கம்தான், களத்திலே வென்று முடிப்பதில்தான் நமது இலக்கு இருக்கின்றது. எல்லோரும் ஈடுபாட்டோடு அரும்பாடாற்றி நாம் வெற்றியைத் தொடுவோம். எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது, அது சாதனை. அந்த சாதனைதான் வெற்றி. எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே வழிதான் இருக்கிறது, கடுமையான உழைப்பு. அந்த உழைப்பைக் கொடுத்து நமது வெற்றியை அடைவோம்.

நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்!

புரட்சி எப்போதும் வெல்லும், நம் வெற்றி அதைச் சொல்லும்!

தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!

எல்லோருக்கும் என்னுடைய அன்பும், வணக்கமும், நன்றியும்!

நாம் தமிழர்!

Exit mobile version