ஆதித்தமிழர் எழுச்சிநாள்: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாள்!

2

தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்ட பெருந்தகை!

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி!

“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை!” என்று முழங்கிய பெருந்தமிழர்!

“வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை!” என்று கற்பித்த புரட்சியாளர்..!

நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் காட்டிய சாதி-மதப் பேதமற்ற சமத்துவ வழியில் பயணிக்க வேண்டும் என்ற உள உறுதியோடு, தமிழ்த்தேசிய அரசியல் எனும் தன்னிகரில்லா தத்துவத் தடம்பற்றி, நாம் தமிழர் கட்சி என்ற புரட்சிகர அரசியல் படையைக் கட்டமைத்து, இனவிடுதலை என்ற உயர்ந்த இலட்சிய இலக்கினை நோக்கி நாம் பயணப்பட்டு வருகிறோம்.

அதன் காரணமாகவே இந்த ஆண்டு, தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாளினை “ஆதித்தமிழர் எழுச்சிநாள்” என இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர் கட்சி சார்பாக கொண்டாடுவோம் என்ற வரலாற்றுச்சிறப்புமிக்க அறிவிப்பையும் வெளியிட்டு, பேரெழுச்சியாகக் கொண்டாடினோம்!

தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவுநாளான இன்று (18-09-2025) அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

#நாம்தமிழர்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி