முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு விடுதலைத் திருநாளில் ஆதித்தமிழ்குடி ஊராட்சி மன்றத்…

0

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு விடுதலைத் திருநாளில் ஆதித்தமிழ்குடி ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும் எவ்வித தடையுமின்றி, தாங்களே கொடியேற்றியுள்ளனர் எனும் செய்தி பெருமகிழ்வைத் தருகிறது!

எந்த ஆண்டும் இல்லாது இந்த ஆண்டு, ஆதித்தமிழ்க்குடி ஊராட்சிமன்றத் தலைவர்கள் கொடியேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவிட கடந்த ஆண்டு வெளிவந்த
'நந்தன்' எனும் மகத்தான கலைப்படைப்பு ஏற்படுத்திய தாக்கமே முதன்மைக் காரணமாகும்!

சமூக அக்கறையுடன் உருவாகும் ஒரு நல்லத் திரைப்படம் எந்த அளவிற்கு மண்ணிலும், மக்கள் மனங்களிலும் மட்டுமின்றி அரசு அதிகாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு அன்புத்தம்பி இரா.சரவணன் எழுதி இயக்கிய 'நந்தன்' திரைப்படம்
ஆகச்சிறந்தச் சான்றாகும்.

இயக்குநர் அன்புத்தம்பி இரா.சரவணன் உள்ளிட்ட நந்தன் திரைப்படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்!

@erasaravanan

Exit mobile version