நான் சென்னை வந்திறங்கிய நாள் தொட்டு இன்று வரை என்னோடு எனக்காக நிற்கும் என் ஆருயிர் அண்ணன், நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு எந்நிலையிலும்
என் தோளுக்கு துணையாக நின்று, தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற தமிழின மக்களின் உரிமைக்காக, அதன் பாதுகாப்பான நல்வாழ்விற்காக,
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முன்நின்று போராடும் செயல்வீரர்,
என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கதிர்.இராஜேந்திரன்
அவர்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
இன்னும் நீண்ட ஆண்டுகள் எல்லா நலமும்,
வளமும் பெற்று மகிழ்வுடன்
நிறைவாக வாழ உங்கள் தம்பி
மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்..!
வாழ்க..! வாழ்க..!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!




