வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!

11

மானமும், வீரமும் உயிரென வாழ்ந்து, தாய் மண் காக்க தன்னுயிர் ஈந்த தன்மானத்தமிழன்..!

சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என வீரக்கலைகள் யாவிலும் வெற்றி வாகை சூடிய தீரன்..!

மதம் கடந்து, சாதி கடந்து தாயக விடுதலைக்கு தமிழர் ஓர்மை படை கட்டிய தமிழ்த்தேசியப் பேரொளி..!

பவானி, சென்னிமலை, அரச்சலூர் என்று ஆங்கிலேயே பெரும்படையை மூன்று முறை தோற்கடித்து வெருண்டோட செய்த மாவீரன்..!

சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் எரிமலையாய் வெடித்தெழுந்த விடுதலைப்போராளி..!

நம்முடைய வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி