‘தமிழ்ப்பெரியார்’ மங்கலங்கிழார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!

2

ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க அறப்போர் புரிந்து சிறை சென்ற எல்லை மீட்புப் போராளி..!

அறநெறித்தமிழ்க்கழகம் நிறுவி
ஏழை-எளிய மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலங்கியங்களைக் கற்பித்து தமிழ்ப்பேரறிஞர்களாக உருவாக்கிய பெருந்தகை..!

தமிழ்ப்பொழில், தமிழ்நாடும் வடவெல்லையும் உள்ளிட்ட அருந்தமிழ் நூல்கள் பல இயற்றி அன்னைத்தமிழுக்கு அணி செய்த தமிழ்ப்பெருந்தொண்டர்..!

‘தமிழர் மாநாடுகள்’ நடத்தி தமிழின உணர்வை வளர்த்தெடுத்த தன்மானத்தமிழர்..!

வடவெல்லைக் காத்த தமிழ் முனிவர்!

‘தமிழ்ப்பெரியார்’ நம்முடைய தாத்தா மங்கலங்கிழார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

#நாம்தமிழர்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி