‘மக்கள் தலைவர்’ ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள்: சீமான் புகழ்வணக்கம்!

6

தமிழ்நாட்டின் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த முதுபெரும் தலைவர்!

தமிழ்மாநில காங்கிரசு கட்சியை நிறுவி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பெருந்தகை!

அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்,
இருமுறை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,
நான்குமுறை நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரசு கட்சித் தலைவர்
என பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்து, இந்திய அரசியலின் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த போற்றுதலுக்கும் வணக்கத்திற்குமுரிய பெருந்தமிழர், மக்கள் தலைவர் நம்முடைய ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாளில் ஐயா அவர்களின் மக்கள் பணிகளை நினைவு கூர்ந்துப் போற்றுவோம்!

#நாம்தமிழர்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி