முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

ஆகஸ்ட் 2 ஆம் நாள் (02.08.2025) தேனி மாவட்டம், பங்களாமேட்டில், 'பட்டியல் வெளியேற்றமே பைந்தமிழர் விடுதலை!' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து, 'தேவேந்திர குல வேளாளர் எங்களை, பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும்!' என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அதற்கு அடுத்த நாள், 03.08.2025 அன்று அதே தேனியில் நம்முடைய வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.,

அதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்துகின்ற மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்!

மதுரையில் நடந்த ஆடு-மாடுகளின் மாநாட்டில் நாம் அறிவித்ததுபடியே, தடையைத் தகர்த்து மாடுகளை நாமே மலைமேல் ஏற்றி, மேய்க்கிற போராட்டம் (03.08.2025) ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு நடக்கவிருக்கின்றது!

இடம்: அடவுப்பாறை, முந்தல், தேனி மாவட்டம்!

மானத்தமிழ் மக்கள் அனைவரும் மறக்காமல் பங்கேற்க வேண்டுமென்று அன்போடு அழைக்கின்றேன்!

நன்றி வணக்கம்!
நாம் தமிழர்!

Exit mobile version