‘வடக்கெல்லை காத்த வீரர்’ தாத்தா ம.பொ.சி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

14

தாத்தா மயிலை பொன்னுசாமி சிவஞானம் அவர்களின் பிறந்தநாள் இன்று!

தமிழ்நாட்டின் வடக்கெல்லை காக்க அரசியல் அறப்போர் புரிந்த வீரர்..!

திருப்பதி கேட்டு, திருத்தணி மீட்டு தலைபோனாலும் தலைநகர் சென்னையைத் தரமாட்டோம் என்று காத்திட்ட தீரர்..!

முதன் முதலில் மாநில தன்னாட்சி முழக்கமிட்ட தனிப்பெருந்தலைவர்!

தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகு சுதந்திர அரசியல் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டென உரைத்து, தமிழ்த்தேசிய அரசியல் காக்க தமிழரசு கழகம் கண்ட தன்மானத்தமிழர்..!

தன்னிகரில்லா தமிழ்ப்பெரும் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை தம் எழுத்தாலும், சொல்லாலும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெலாம் கொண்டு சேர்த்ததோடு, ஆண்டுதோறும் ‘சிலப்பதிகார விழா’ எடுத்தும் பெருமை சேர்த்த பெருந்தகை..!

சிலப்பதிகாரம் குறித்து 13 நூல்கள், பாட்டன் பாரதி பற்றி 10 நூல்கள், தாத்தா வ.உ.சி பற்றி 3 நூல்கள் என இன்னும் பற்பல நூல்கள் இயற்றி அன்னைத்தமிழுக்கு அணி சேர்த்த இலக்கியப் பேரறிஞர்..!

வடக்கெல்லை காத்த வீரர்!
பெருந்தமிழர்!

நம்முடைய தாத்தா ம.பொ.சி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

https://x.com/Seeman4TN/status/1938090231854682410

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி