தமிழ் இலக்கியப் பேராளுமை, கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைப்படப் பாடலாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், இதழியலாளர் என்று பன்முகத்திறன் கொண்ட பெருந்தகையின் மறைவு தமிழ் இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
கவிஞர் நந்தலாலா அவர்களின் மறைவால் பெருந்துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய அன்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா நந்தலாலா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




