முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்து…

0

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணிபுரிந்த தம்பிகள் வெங்கடேசன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் உயிரிழந்தடன், மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த வெங்கடேசன் மற்றும் மாரிமுத்து ஆகியோரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தம்பிகள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

தமிழ்நாடு அரசு மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதுடன், இனியாவது அவர்கள் அனைவரையும் பணி நிலைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

உயிரிழந்த தம்பிகள் வெங்கடேசன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் அவர்களது குடும்பத்திற்கு வழங்க வேண்டிய துயர்துடைப்பு நிதியில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என்றும், படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவம் அளிப்பதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதுடன், படுகாயமடைந்தவர்களுக்கு 25 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும்.

@CMOTamilnadu @mkstalin

உயிரிழந்த தம்பிகள் வெங்கடேசன் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version