முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்த நாள், ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்’…

0

‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்த நாள், ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்’ எனக் கொண்டாடப்படும் எனும் திமுக அரசின் அறிவிப்பு குறித்தான செய்தியைக் கேள்வியுற்றேன். தமிழ் இலக்கிய உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது பெரும்பாவலர் பாட்டன் பாரதி தான். அவர் காலம்தான் இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. ஆகவே, பெரும்பாவலர் பாரதியின் பிறந்த நாளை, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்’ எனக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும்.

‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் ஈடில்லா பங்களிப்பைப் போற்ற அவருடைய பிறந்த நாளை, ‘தமிழிலக்கியப் பாதுகாப்பு நாள்’ எனக் கொண்டாடுவதே சரியாக இருக்கும் என்பதால், தமிழக அரசு அதனை மாற்றிப் போற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

@CMOTamilnadu @mkstalin

Exit mobile version