திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்தொகுதி, ஓவரூர் ஊராட்சியின் பொறுப்பாளர் அன்புத்தம்பி கா.மூவேந்தன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் வேதனையடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னையும் இணைத்துக் கொண்டு களப்பணியாற்றி வந்த தம்பி மூவேந்தன் அவர்கள் இளம் வயதிலேயே நம்மைவிட்டுப் பிரிந்திருப்பது பெருந்துயரத்தைத் தருகிறது.
ஈடு செய்ய இயலாத பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி மூவேந்தன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




