திருவாரூர் மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சி, அடஞ்சவிளாகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர் தம்பி மன்மதராஜன் அவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
எளியப் பின்புலம் கொண்ட தம்பி மன்மதராஜன் அவர்கள் விவசாயப்பணி செய்து பிழைத்த வந்த நிலையில், அவர் மின்னல் தாக்கி உயிரிழந்ததால் அவரையே முழுமையாக நம்பியிருந்த அவரது குடும்பம் நிராதரவற்று நிற்கிறது.
ஆகவே, உயிரிழந்த விவசாயத்தொழிலாளர் தம்பி மன்மதராஜன் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி




