முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குழந்தையின் உயிர்காக்க உதவிடுவோம்! ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி சிவக்குமார்…

0

குழந்தையின் உயிர்காக்க உதவிடுவோம்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி சிவக்குமார் – யோகப்பிரியா இணையரின் ஒன்றரை வயது குழந்தை NEUROBLASTOMA CANCER என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

தற்போது கோவை மருத்துவமனையில் (KMCH Admission No: 2057543) குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிர் காக்கும் மருத்துவச் சிகிச்சைக்கு ஏறத்தாழ 90 இலட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியதால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குழந்தையின் பெற்றோர் பண உதவி கோரியுள்ளனர்.

மழலையின் உயிர் காக்க பண உதவி செய்ய விழையும் நல்லுள்ளங்கள், கீழ்க்காணும் அலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தங்களால் இயன்ற உதவியை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தந்தை சிவக்குமார் 9566664416
தாயார் யோகப்பிரியா 9994257907

Exit mobile version