நாம் தமிழர் கட்சி – விருதுநகர் சட்டமன்றத் தொகுதி நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட செங்குன்றாபுரம் பொறுப்பாளார் அன்புத்தம்பி சூரிய பிரகாஷ் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி சூரிய பிரகாஷ் அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது பெரும் துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சூரிய பிரகாஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




