தேவர் கூட்டமைப்பின் தலைவர், நேதாஜி தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் அன்பிற்கினிய சகோதரர் சண்முகையா பாண்டியன் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
சகோதரர் சண்முகையா பாண்டியன் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேவர் கூட்டமைப்பு உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரர் சண்முகையா பாண்டியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




