முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியின் கையூட்டு-ஊழல்…

2

நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியின் கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைச் செயலாளர், மதிப்பிற்குரிய ஐயா தணிக்கையாளர் பாண்டி அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன்.

மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, கையூட்டு- ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பேற்று, களப்பணியாற்றி வந்த ஐயாவின் மறைவு பேரிழப்பு.
ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்பிற்குரிய ஐயா தணிக்கையாளர் பாண்டி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version