தேனி மாவட்டம், நாம் தமிழர் கட்சி – ஆண்டிப்பட்டி தொகுதி இணைச் செயலாளர் அன்புத்தம்பி ராசா பழனிச்சாமி அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, களப்பணியாற்றிவந்த தம்பி ராசா பழனிச்சாமி அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ராசா பழனிச்சாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




