முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு மதுரை விராதனூர் என்னும் இடத்தில் ஆடு-மாடுகளின் மாநாடு நடக்கவிருக்கிறது.

"மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடக்கிறது।

மேய்ச்சல் புறம்போக்கு என்று ஒரு இடம் இருந்தது இன்றைக்கு அது சுத்தமாக இல்லை. மலை அடிவாரங்களில் காடுகளில் ஆடு-மாடுகள் மேய்க்கிற வாய்ப்பு இருந்தது அதுவும் இன்று தடுக்கப்பட்டிருக்கிறது. கால்நடை நம்முடைய செல்வங்கள் அது சார்ந்தது வேளாான் பெருங்குடி மக்களின் தற்சார்பு வாழ்க்கை.

தற்காலச்சூழலில் ஆடு-மாடுகள் வளர்ப்பது அவ்வளவு கடினமான ஒரு பணியாகி அதை விட்டுவிட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு நம்முடைய உறவுகள் தள்ளப்படுகிறார்கள். அதில் எவ்வளவு இடையூறுகள் இருக்கிறது; அது சார்ந்து எவ்வளவு பொருளாதாரம் இருக்கிறது; என்பதை எல்லாம் விளக்கி இந்த மாபெரும் மாநாட்டை நடத்த இருக்கிறோம்.

எனவே, என் அன்பு உறவுகள் இந்த மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக நடந்து தமிழ்நாட்டை தாண்டி இந்திய பெருநிலத்தின் கவனத்தை இழுத்து, இதற்குொரு ஒரு முடிவைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்.

அதில் உணர்வெழுச்சியோடு என் அன்பு உறவுகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன்.

இது ஆடு மாடுகளின் உரிமை அல்ல; நம்முடைய உரிமை! நம் மண்ணின் உரிமை!

ஆடும், மாடும் நம் உடன் பிறந்தவைகள்; நம்முடைய செல்வங்கள்!

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்று நம்முடைய மறையோன் வள்ளுவப் பெருமகனார் பாடிய குறளுக்குப் பொருள் கல்விதான் மானுடனுக்கு அழியாத செல்வம்; அதேவேளையில் மாடும் நம் செல்வம் என்கிறார்.

இந்த மாடு மாடல்ல; நம் செல்வம்! அதனால் பேசும் திறனற்ற அவர்களுக்காகப் பேசுவதற்கு நாம் கூடுவோம்.

இந்த நிகழ்விற்கான திரள்நிதி திரட்டலில் என் அன்பு சொந்தங்கள் இயன்றளவு நிதி உதவி அளித்து உங்கள் பிள்ளைகள் எங்கள் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.

https://t.co/LRNrx24W3S

உங்கள் அனைவரின் வரவையும் ஆவலோடு எதிர்பார்த்து இந்த நிலத்தில் சூலை 10ஆம் தேதி காத்திருப்பேன்!

நன்றி! வணக்கம்!

நாம் தமிழர்!

Exit mobile version