புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, வனவம்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – ஓமன் செந்தமிழர் பாசறையின் சலாலா மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி அன்பழகன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து பெரும்பணியாற்றி வந்த அன்புத்தம்பியை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி அன்பழகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி அன்பழகன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!



