நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ஆட்டையாம்பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள் அன்புத் தம்பிகள் கோ.தங்கராசு, கோ.பிரகாஷ் அவர்களின் தாயார் சரஸ்வதி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அம்மாவை இழந்து வாடும் தம்பிகளுக்கும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மையார் சரஸ்வதி அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!




