முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி- பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட நசரத்பேட்டை ஊராட்சி பொறுப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சி- பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட நசரத்பேட்டை ஊராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி இர.அன்பரசன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

மண்ணையும், மக்களையும் நேசித்து, சிறுவயதிலேயே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து, கட்சி நிகழ்வுகளில் துடிப்புடன் பங்கேற்று வந்த அன்புத்தம்பி அன்பரசன் அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

அன்புத்தம்பியை இழந்து வாடும் பெற்றோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி இர.அன்பரசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version