நாம் தமிழர் கட்சியின் திருச்செந்தூர் தொகுதிச் செயலாளர் அன்பு சகோதரர் உ.ஞானசேகரன் அவர்களின் அன்புமகன் அமுதன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பெற்றெடுத்து போற்றி வளர்த்த அன்புமகனை இளவயதிலேயே பறிகொடுப்பது பெருந்துயரத்திற்குரியது. சகோதரர் ஞானசேகரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகன் அமுதன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




