நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி வே.செல்வம் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா பா.வேலு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி செல்வம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பா.வேலு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




