முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

0

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மானாமதுரை தொகுதி துணைத்தலைவர் அன்புத்தம்பி பொ.மணிகண்டன் அவர்களின் தந்தையாரும், சிவகங்கை தெற்கு மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் அன்புத்தங்கை ம.சண்முகப்பிரியா அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய ஐயா இரா.பொன்னையா அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா இரா.பொன்னையா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version