முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று திடீரென நள்ளிரவில்…

1

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று திடீரென நள்ளிரவில் கசிந்து அப்பகுதி முழுவதும் பரவியதையடுத்து, உடனடியாக அங்கிருந்து வெளியேறி பேராபத்தில் இருந்து தப்பி பிழைத்த மக்கள், தங்களின் உயிருக்கும்,  மீன்பிடித்தொழிலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ள கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர்துடைப்பு உதவிகளை வழங்கக்கோரியும் எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் 33 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நான்கு நாட்களாக தொடர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 31.12.2023 போராடிவரும் மக்களை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறி கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினேன். எண்ணூர் மக்களின் போராட்டக் கோரிக்கைகள் வெல்லும் வரை நானும், நாம் தமிழர் கட்சியும் தோளோடு தோளாக களத்தில் துணை நிற்போம் என்று உறுதியளித்தேன்.

Exit mobile version