முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி செய்தித்தொடர்பாளர் அன்புத்தம்பி இரா.கண்ணன்…

0

நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி செய்தித்தொடர்பாளர் அன்புத்தம்பி இரா.கண்ணன் அவர்களின் தாயார் சுப்புலட்சுமி அம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து மனவேதனையடைந்தேன்.

பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையை இழந்து வாடும் தம்பி கண்ணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா சுப்புலட்சுமி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version