முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தலைநிலக் குறிஞ்சித்திணை தந்த தலைவன் தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமானின்…

2

தலைநிலக் குறிஞ்சித்திணை தந்த தலைவன் தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியிலுள்ள கோயிலின் வழிபாட்டுக் கட்டணத்தைப் பெறுவதற்குப் பண்டாரங்களே உரித்தானவர்கள் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறேன்.

(1/3)

நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா நிகழ்வு 07-02-2015 அன்று பழனியில் நடைபெற்றபோது, புலிப்பாணி சித்தர்கள் மற்றும் பண்டார சமூகத்தினருக்கான உரிமையை நிலைநாட்டக்கோரியே முதல் தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.

(2/3)

இன்றைக்கு அத்தீர்மானத்திற்கு உயிரூட்டப்பட்டிருப்பதுபோல, கிடைக்கப்பெற்றிருக்கிற தீர்ப்பு பெரும் அகமகிழ்வினைத் தருகிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி, உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

(3/3) https://bit.ly/3PFh2jS

Exit mobile version