முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மேகாலயாவில் இன்று தொடங்கும் ஒன்றிய அளவிலான 83வது மேசை பந்தாட்டத்…

12

மேகாலயாவில் இன்று தொடங்கும் ஒன்றிய அளவிலான 83வது மேசை பந்தாட்டத் தொடரில் பங்கேற்பதற்காக மேகாலயா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் விஷ்வா தீனதயாளன் அவர்கள் அங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். (1/3)

அன்புமகனைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி விஷ்வா தீனதயாளனுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

துடிப்புமிகு தனது ஆட்டத்திறனால் தமிழகத்தின் நம்பிக்கையாகத் துளிர்விட்டு, பற்பல சாதனைகள் புரியும் ஆற்றல் பெற்றிருந்த தம்பி விஷ்வா தீனதயாளன் இளவயதிலேயே, இலக்கு நோக்கிய பயணத்திலேயே உயிரிழக்க நேர்ந்தது எதன் பொருட்டும் ஈடுசெய்யவியலாப் பேரிழப்பு!

(2/3)

Exit mobile version