மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வன்னிய சமூக மக்களுக்காக அறிவிக்கப்பட்ட 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு செல்லாது எனும் உயர்நீதிமன்றத்தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமுமளிக்கிறது. தமிழக அரசு, நீதிமன்றத்தில் போதுமான விளக்கங்கள் அளித்து வாதிடாததே…
(1/2)
இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட முக்கியக்காரணமாக அமைந்திருக்கிறது.
ஆகவே, உடனடியாகச் சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கவும், 10.5% உள்ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். (2/2)


