முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராஜஸ்தான் மாநில முதல்வர் @ashokgehlot51 அவர்கள், ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்குத்…

0

இராஜஸ்தான் மாநில முதல்வர் @ashokgehlot51 அவர்கள், ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளதையும், முறையான சான்றிதழ் இல்லாது இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதையும் முழுமையாக வரவேற்கிறேன்.

(1/3)

காற்று மாசுபாடு, கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளானவர்களைப் பெரிதும் பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளின் விகிதத்தையும் அதிகரிக்கச்செய்யும் என்பதை மனதிற்கொண்டு எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை பாராட்டுதற்குரியதாகும்.

(2/3)

இதேபோன்று, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த இழப்பீட்டை உறுதி செய்து, பட்டாசுத்தொழிலைச் சார்ந்து இருக்கும் ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர மாற்று வாழ்வாதாரத்தை ஏற்பாடு செய்ய முன்வர வேண்டுமெனவும் @CMOTamilNadu கேட்டுக்கொள்கிறேன்.

(3/3) #Fireworks

Exit mobile version