முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர்…

0

சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பூமணி (எ) பூ.மாணிக்கவாசகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

வெக்கை, அஞ்ஞாடி வரப்புகள், வாய்க்கால், நூறென் உள்ளிட்ட நாவல்களையும், வயிறுகள், ரீதி, நொறுங்கல் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்தளித்து ஈரம் உறைந்த கரிசல் மண்ணின் வீரம் நிறைந்த மனிதர்களின் மகத்தான வாழ்வியலை தரிசிக்கத் தந்த ஆகச்சிறந்த தமிழ் இலக்கிய முன்னோடி ஐயா பூமணி அவர்களின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

ஐயா பூமணி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இலக்கிய நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.

தம் எழுத்தின் வல்லமையால் மனித மனங்களை உழுது மகத்தான சமூக மாற்றத்தை மண்ணில் விதைத்த போற்றுதற்குரிய முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஐயா பூமணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version