நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் அன்புத்தம்பி தமிழன் காளிதாஸ் அவர்களின் தாயார் அம்மா அம்சம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா அம்சம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




